வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் பொதுமக்கள் பாதிப்பு

57பார்த்தது
*அருப்புக்கோட்டையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் காரணமாக வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்*

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட கோரியும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

டேக்ஸ் :