மக்கள் பிழைகள் குறித்து கள ஆய்வு செய்த தவெவினர்

1பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் வீதி வீதியாக சென்று மக்கள் குறைதீர்க்கும் கள ஆய்வு நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கள ஆய்வு நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பந்தல்குடியில் வீதி வீதியாக சென்று பொது மக்களையும் வியாபாரிகளையும், பெண்கள் மற்றும் முதியவர்களையும் சந்தித்து தங்கள் பகுதியில் உள்ள நீண்ட கால பிரச்சனைகள் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு என்ன வசதி தேவை வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன? வரும் தேர்தலில் தவெக தலைவர் விஜய்க்கு உங்கள் ஆதரவை தெரிவிப்பீர்களா, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட மகளிர் அணி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி