அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் வேளாண்மை துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய பல்வேறு வகையான வேளாண் உற்பத்தி பொருட்கள், விதைகள், பயிர்கள், உரங்கள், வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருட்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்,
வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய மூன்று அமைச்சர்கள் இணைந்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் பொருட்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வேளாண்மை சார்ந்த புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.