விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவிகள் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து கல்லூரி வளாகத்தில் கரும்புகளை சுற்றி வைத்து புது பானையில் பொங்கல் இட்டு மகிழ்ந்தனர் மேலும் பொங்கல் பானையை சுற்றி மாணவிகள் பாட்டு பாடிக்கொண்டே அழகாக கும்மி அடித்த நிகழ்வு காண்போரை கவர்ந்தது. மேலும் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் என கூறியும் குலவை போட்டும் மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவிகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் திரைப்படப் பாடல்களுக்கு கண்ணை கவரும் வகையில் கல்லூரி மாணவிகள் குத்தாட்டம் போட்டது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
ஜாதி மத பேதமின்றி அனைத்து கல்லூரி மாணவிகளும் ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு துறையாக தனித்தனியாக கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.