விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்க பாடுபடுவேன் என அனைவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று கொண்டனர். அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பழைய பஸ் ஸ்டான்ட் ரோடு பகுதியில் இன்று ஜுன் 5 அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துமரறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுவாக மஞ்சள் பை வழங்கி நெகிழி தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்