கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்

77பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(32). கூலி வேலை செய்துவரும் ராமகிருஷ்ணன் பைக்கில் பாப்பங்குளம் ஒயின்ஷாப் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது பைக்கை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று ஜுலை 9 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ‌ அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ‌ போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி