விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ANUT திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், 1152 பயனாளிகளுக்கு ரூ. 1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்த அட்டை இருக்கும் என்று சொன்னால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையானது 691 பயனாளிகளுக்கும், நகர நிலவரித்திட்டத்தின் மூலம் 200 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், சாலை விபத்து நிவாரணம் 122 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலும், உழவர் அட்டை 50 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப மின்னணு அட்டையானது 25 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர்/பிற்படுத்தப்பட்டோர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டா 50 பயனாளிகளுக்கு ரூ.49 இலட்சம் மதிப்பிலும், இலவச வீட்டுமனைப்பட்டாவானது 10 பயனாளிகளுக்கு ரூ.7,70,880/- மதிப்பிலும், தையல் இயந்திரம் 4 பயனாளிகளுக்கு ரூ.26,760/- மதிப்பிலும் என மொத்தம் 1152 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.