சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுவழங்கிய அமைச்சர்

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள சாலியர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மாபெரும் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. UNDER 9, UNDER 11, UNDER 17 மற்றும் OPEN என நான்கு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் இந்த போட்டிகள் நடைபெற்று முடிந்தது. காலை முதல் மாலை வரை இந்த போட்டிகள் நடைபெற்றது. ‌ மாலை வேளையில் பள்ளி மைதானத்தில் இந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பைகள் பரிசுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சருக்கு மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கை கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற 1300 செஸ் வீரர் வீராங்கனைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த செஸ் வீரர் வீராங்கனைகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி