பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் ஆர்

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சியில் ரூ 18. 50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‌புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். ‌ மேலும் ரூ 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். புலியூரான் மற்றும் இலங்கிப்பட்டியில் தலா ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு பயணிகள் நிழற்குடையும் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொய்யாங்குளம் கிராமத்தில் ரூ‌ 16. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தக்க தொட்டியையும், தொட்டியாங்குளம் கிராமத்தில் ரூ 27. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுமார் 60, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். கட்டுவதற்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். ‌ இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி