விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் ரூ 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கடந்த 2 தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் உள்ளது என்பது குறித்தும் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் மருந்து மாத்திரைகள் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேறு என்ன தேவைகள் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டிறிந்தார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.