அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருகோவிலில் பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த ஐந்தாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய இந்த கும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தன பூஜை, தீபலட்சுமி பூஜை என பல்வேறு வகையான ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து புஜிக்கப்பட்ட புனித நீர் கோவில் கோபுர கலசங்களுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மூலவருக்கும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் கும்பாபிஷேக நிர்வாக குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.