முன்விரோதம் காரணமாக அமரர் ஊர்தி ஓட்டுநர் கொலை ஒருவர் கைது

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி காமராஜர் நகர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் போஸ் என்பவர் மகன் துரைமுருகன் (வயது 40). இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி ராமலட்சுமி துரைமுருகனை பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். துரைமுருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். துரைமுருகன் கழுத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ராமலட்சுமியின் தூரத்து உறவினர் சத்தீஸ்கர் மாநிலம் கோப்ராவில் வேலை செய்து வந்த சி. ஆர். பி. எப் வீரர் ஜெய கணேசன்(35) சம்பவத்தன்று அப்பகுதிக்கு வந்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விருதுநகரில் இருந்த ஜெயகணேசனை விசாரணை நடத்தியதில் ஜெயகணேசன் துரைமுருகனை கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார் ஜெய கணேசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி