சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு

73பார்த்தது
அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில் நேற்று ஜுலை 26 ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கடின உழைப்பால் தான் உயர்வான நிலைக்கு வந்து இருக்கிறேன், உழைப்பு இருந்தால் எந்த உயர்வையும் அடையலாம். நான் அரசு பள்ளியில் படித்தவன் தான். இங்குள்ள நீதிபதிகள் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அரசுப் பள்ளியில் படித்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 8 நீதிபதிகள் இங்கு கர்மவீரர் காமராஜர் பிறந்த மண்ணில் வந்து பேசுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. ‌
என பேசினார். இந்த நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் மதுரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி