மகளிர் உரிமை தொகை பெற்று தருவது எனது கடமை

84பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பந்தல்குடி, தும்மக்குண்டு, வேலாயுதபுரம், செட்டிபட்டி, சேதுராஜபுரம், கொப்புசித்தம்பட்டி உழைத்த ஆறு ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ‌ மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ‌ மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்வாரியம், வேளாண்மை துறை, காவல் துறை உள்ளிட்ட 14 துறைகளின் கீழ் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கி பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் உதவித் தொகை, உதவி தொகை கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு மனுக்களை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலருக்கு கிடைக்காமல் உள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினராக அதைப் பெற்று தருவது என்னுடைய கடமை. ‌ நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் இணைந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி