அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணகுமார் & சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய நீதிமன்றத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றத்தையும், காரியாபட்டி மற்றும் வத்திராயிருப்பில் மாவட்ட உரிமையியல் & நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களையும் நீதிபதி கிருஷ்ணகுமார் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், விருதுநகர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.