ஊரகப் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா

50பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்‌ திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை‌ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் துவக்கி வைத்து
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் பல்வேறு துறைகளின் கீழ் 207 பயனாளிகளுக்கு ரூ 82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். ‌
முன்னதாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவதற்காக பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை அமைச்சர் பார்வையிட்டார். ‌ இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி