அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிவ வாத்தியங்களுடன் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அதனைத் தொடர்ந்து
யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.