மாலை வேளையில் பெய்த கன மழை

1585பார்த்தது
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது‌. இந்நிலையில் மாலை வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன்‌ கன மழை பெய்தது.

அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான பெரிய புளியம்பட்டி, சொக்கலிங்கபுரம், நெசவாளர் காலனி ராமசாமிபுரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெய்த கனமழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. எனினும் கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி