அருப்புக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழை

572பார்த்தது
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஜூன் 6 மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி கோபாலபுரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம், ஆத்திபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் மீண்டும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். ‌

தொடர்புடைய செய்தி