விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் +2 ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கான உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாரூர் செண்ட்ரல் யுனிவர்சிட்டி பேராசிரியர் குணசேகரன், ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் ரவீந்திரன், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மற்றும் இஸ்ரோவில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற முன்னாள் அசோசியேட் டைரக்டர் கல்பனா அரவிந்த் ஆகிய வல்லுநர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி குறித்தும், கல்லூரிகள் குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கி மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.