மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

58பார்த்தது
*வைகோ மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்துள்ள மன்மோகன் சிங் மரணம் காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே இழப்பு*

*புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அண்ணாமலை நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படுவது வேதனைக்குரியது*

*அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து காவல்துறை சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது - அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ பேட்டி*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் மதிமுக பொது செயலாளர் வைகோ ராஜ்ய சபா உறுப்பினர் நிதியின் கீழ் 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ 15 லட்சம் மதிப்பில் புதிதாக மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டப்பட உள்ளது. ‌ இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ கலந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த துரை வைகோவை கஞ்சநாயக்கன்பட்டி பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி