மல்லிகைப்பூ விலை குறைவால் விவசாயிகள் வேதனை

74பார்த்தது
மல்லிகைப்பூ விலை குறைவால் விவசாயிகள் வேதனை
அருப்புக்கோட்டையில் சுற்றுவட்டார பகுதிகளிலீ பகுதிகளில் மல்லிகை விவசாயம் அதிக அளவு நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் மல்லிகைப்பூ விலை வெகுவாக குறைந்துள்ளது. ‌ விழா காலங்களில் முகூர்த்த தினங்களில் ரூ 3, 000 வரை விற்பனை செய்யப்படும் மல்லிகைப்பூ தற்போது விலை வெகுவாக குறைந்து கிலோ ரூ 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து மல்லிகை பூ விவசாயிகள் கூறுகையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு மல்லிகை பூ விவசாயம் செய்யப்படுகிறது. ‌ இங்கு நாங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 350 வரை விவசாய கூலி பணியாளர்களுக்கு கொடுத்து மல்லிகை பூ விவசாயம் செய்கின்றோம். உரம் உள்ளிட்ட பொருட்களின் நிலையம் அதிகரித்துள்ளது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் மல்லிகைப்பூ கிலோ ரூ 200 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது கூலி பணியாளர்களுக்கு கூலி கொடுக்கவே போதாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகை பூவை பறிக்காமல் அப்படியே செடிகளில் விடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் முல்லைப்பூ கிலோ ரூபாய் 80 ரூபாய்க்கும், ரோஸ் கிலோ ரூ 40 க்கும்,
பச்சை கிலோ ரூ 40 க்கும், என விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கனகாம்பரம் மட்டுமே கிலோ ரூ 800 க்கு
விற்பனை செய்யப்படுகிறது. ‌
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி