மதுபான கடைக்கு சென்றவரை மிரட்டி பணம் வழிப்பறி

565பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(44). கூலி வேலை செய்து வந்த குருசாமி அருப்புக்கோட்டை சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு மது குடிப்பதற்காக நகரில் உள்ள மதுபான கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாய்பாபா கோவில் எதிரே ஒத்தையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது குருசாமியை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ 1,000 பணத்தை வழிப்பறி செய்து தப்பி ஓடினர். இது குறித்து குருசாமி புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி