திமுக சார்பில் நான்காண்டு சாதன விளக்கப் பொதுக்கூட்டம்

56பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ராஜீவ்நகரில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதன விளக்கப் பொதுக்கூட்டம்; தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ராஜீவ்நகரில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்
தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் ஏற்பாட்டில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் எஸ். எம். தமிழ்ப்பிரியன், பேச்சாளர் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ் மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினர். விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக விளக்கிப் பேசினர். இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி