மாவட்ட ஆட்சியர் சுக்கிலநத்தம்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அருப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுக்கிலநத்தம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் விசிட் அடித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் புதர் மண்டி சேதமடைந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஏன் இவ்வாறு கிடக்கிறது இதை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டியது தானே என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் வரவேற்றபோது ஏன் இந்த விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு உள்ளது என கேட்டதற்கு தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என கூறினார். தினம்தோறும் சுத்தம் செய்வதால் இவ்வளவு அழகாக இருக்கிறதா பரவாயில்லையே என எனக் கூடிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முறையாக சுத்தம் செய்து வைக்குமாறு தலைமை ஆசிரியரை அறிவுறுத்தினார். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி