மகள் மாயம்; தந்தை காவல் நிலையத்தில் புகார்

1001பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(60). சித்தாள் வேலை செய்து வருகிறார் இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த குமரவேல் மகள் திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமரவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு தாலுகா காவல் நிலையத்தில் நேற்று (ஜூன் 7) புகார் அளித்துள்ளார். குமரவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி