விருதுநகர் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் யோக. வாசுதேவன் ஏற்பாட்டில், அதிமுக பூத்கமிட்டி பாக கிளைக்கழக நிர்வாகிகள் அமைத்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை பூத்கமிட்டி மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வு பணி மற்றும் ஆலோசனைக் கூட்டம் அருப்புக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. R. K. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பூத்களில் பூத் கமிட்டி அமைத்ததை ஆய்வு செய்து பூத் கமிட்டி நிர்வாகிகளோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில கழக சிறுபான்மை நலப்பிரிவு துணைச்செயலாளர் சித்திக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, கே. கே. சிவசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.