*அருப்புக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் தங்களது இல்லம் முன்பு கருப்பு கொடியுடன் திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்*
தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமையில், நகர தலைவர் மாரிமுத்து முன்னிலையில் அருப்புக்கோட்டை நகர பாஜகவினர் தங்கள் கைகளில் கருப்பு கொடியுடன், திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் வெள்ளம் போல் சாராய ஆறு ஓடுகிறது, தமிழகத்தின் தென் மாவட்டங்களை கேரளா அரசின் குப்பை கிடங்காக மாற அனுமதித்த திமுக அரசு ஒழிக என திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இந்த கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரி, பாஜக நிர்வாகிகள் கோபால்ராஜ், கோபி கிருஷ்ணன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.