அருப்புக்கோட்டை அருகே ராமனுஜபுரத்தில் முன்பகை காரணமாக முதியவர் மீது தாக்குதல்; தாலுகா போலீசார் வழக்குபதிவு.
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் சம்பத்(63). இவருக்கும் ராமனுஜபுரத்தை சேர்ந்த இவரது மருமகன் வெங்கடேஷ் குடும்பத்திற்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பத் சொந்த வேலையாக சம்பத் ராமனுஜபுரம்
சென்றபோது அவரை வழிமறித்த வெங்கடேஷ் அவரது தந்தை மற்றும் அவரது தாய் ஆகிய மூன்று பேர் சேர்ந்து முன்பகை காரணமாக சம்பத்தை அடித்து காயப்படுத்திதாக கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் நேற்று(8. 10. 23) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று(9. 10. 23) வெளியிட்டுள்ளனர்.