அருப்புக்கோட்டை: விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நபர் பலி

52பார்த்தது
அருப்புக்கோட்டை: விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நபர் பலி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி வயது 63 இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இவருடைய மகள் முருகேஸ்வரி அளித்த புகார் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி