அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புறநகர் பகுதியான ஆர்.கே. நகரில், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தில் குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கான அடிக்கல்நாட்டு விழாவில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளும் முன்னோடிகளும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.