அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு செட்டிகுறிச்சி, கட்டங்குடி, பாளையம்பட்டி, கோபாலபுரம், கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 96 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கினார். மேலும் அதேபோல ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 277 பயனாளிகளுக்கு வீடுகள் பழுது பார்ப்பதற்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.