அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் நடந்து சென்ற முதியவர் மீது பின்னால் வந்த ஆம்னி வேன் மோதி முதியவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகர் 5வது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(70). இந்நிலையில் நேற்று ஜூன் 1 பன்னீர்செல்வம் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இனிமை ஹோட்டல் எதிரே பின்னால் வந்த ஆம்னி வேன் மோதி பன்னீர்செல்வம் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய விழுந்த முதியவர் பன்னீர்செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பன்னீர்செல்வம் மகள் கங்காதேவி(44) அளித்த புகார் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஆம்னி வேன் ஓட்டுநர் வெள்ளக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம்(50) என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இன்று ஜூன் 2 வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.