நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

74பார்த்தது
நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
அருப்புக்கோட்டை வார்டு எண் 34 இளைஞர் சங்கம் தெருவில் நகராட்சி சுகாதாரத்துறை‌ சார்பில் உலர் கழிவுகள் & ஈரக் கழிவுகள் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.

அருப்புக்கோட்டை நகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் வார்டு 34 இளைஞர் சங்கம் தெருவில் பொது மக்களுக்கு உலர் கழிவுகள் மற்றும் ஈரக்கழிவுகள் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு கழிவுகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளரிடம் உலர் கழிவுகள் மற்றும் ஈரக் கழிவுகளை பிரித்து வழங்க வேண்டும். இதன் மூலம் தூய்மை பணியாளரின் பணி குறைந்து கூடுதல் தூய்மை பணி மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு நுண்ணுயிர் உரக்கூடத்தில் உரம் தயாரிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில்
சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி