விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில்
எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1973-74 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த பழைய மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அன்றைய வருடம் பத்தாம் வகுப்பு படித்த நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற பழைய மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். நக்கீரன் கோபாலுடன் படித்தும் அவருடன் பழைய நட்பில் இருந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சிரித்து மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பழைய நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இருந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து வெளிப்படுத்தினர்.
வரும் கூட்டமாக இதை பார்க்கிறோம். அந்த பழைய வாழ்க்கை தற்போது கிடைக்காதா என ஏங்குகிறோம். பல விருதுகள் வரும் போகும் ஆனால் இந்த நாள் வராது. இந்த நாள் மிகவும் அற்புதமான நாள். அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் மனதில் நிழலாடுகிறது. இந்த தொடர்பு ஜென்மத்துக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என பேசினார்.