இப்தார் நோன்பு திறப்பு அதிமுக மாவட்டச் செயலாளர் பங்கேற்பு

57பார்த்தது
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பேச்சு*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய பள்ளிவாசல் முன்பு அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரகுமான், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கோட்டை சுப்பிரமணியன், மணிமேகலை, நகர செயலாளர் சோலை சேதுபதி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி இப்தார் நோன்பு திறந்து வைத்து இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி அருந்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,

இஸ்லாமிய மக்களுக்கு பெரும் அரனாக இருக்கும் இயக்கம் அதிமுக.
ஜெயலலிதா ஆட்சி உலமாக்களுக்கு ரூ 1, 500 வழங்கினார் எடப்பாடி ஆட்சி காலத்தில் அந்த நிதியை ரூபாய் 3, 000 ஆக உயர்த்தினார். எங்களுக்கு தோளோடு தோள் நின்ற இயக்கம் எஸ்டிபிஐ கட்சி. எப்போதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய பெருமக்களை காக்கும் காவலனாக இருக்கும் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி