வேளாண் உணவு வர்த்தகமையம், நடைபெற உள்ளது.

55பார்த்தது
TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான/சொந்தமாக உள்ள நிறுவனங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சந்தைஇணைப்புகள், நிதி மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது. பெண் தொழில்முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத்தேவையான இணக்கப்பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும் விரிவாக்கத்திற்கும் ஒருபெரும் தடையாகவுள்ளது.
இதுகுறித்து, மதுரை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினை TN-RISE ஏற்பாடு செய்துள்ளது.
மேற்காண் சேவைகளின் மூலம் பெண் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் பிரதானசாலை மதுரையில் வருகின்ற 07. 02. 2025 அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 06. 00 மணி வரை நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி