கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை பயன்படுத்தினால் நடவடிக்கை

57பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், இது போன்ற அளவுக்கு அதிகமான சத்தங்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் புகார்கள் வந்துள்ளன. பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக் குறைக்க ஒலி மாசு தடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினைக் குறைக்கின்றன. இது போன்று வாகனப்போக்குவரத்தை நெறிபடுத்துவதன் மூலமும் ஒலி மாசினைக் குறைக்க இயலும் ஆனால் பொது சுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள் திருவிழாக்கள் மற்றும் தனி நபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிக சத்தமான ஒலி மாசினால்பொது மக்களுக்கும், முதியோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன்அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த அளவு ஒலியுடன் ஒலி பெருக்கியினை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த நேர்வுகளிலும் இரவு நேரங்களில் ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எச்சரிக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி