சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

2033பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே
குல்லூர்சந்தை - பாலவநத்தம் சாலையில் சைக்கிள் மீது இருசக்கர வாகன மோதி விபத்து; தாலுகா போலீசார் வழக்கு பதிவு.

அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(38). இந்நிலையில் ராமர் சொந்த வேலையாக தனது சைக்கிளில் பாலவநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது
குல்லூர்சந்தை - பாலவநத்தம் சாலையில் பின்னால் அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் ராமர் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்
ராமர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தாலுகா போலீசார் நேற்று(7. 10. 23) விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் வில்சன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று(8. 10. 23) வெளியிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி