மழைநீர் சூழ்ந்து காணப்படும் ரயில்வே தரைப்பாலம்

60பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் - பாலவநத்தம் சாலையில் ரயில்வே தரைப்பாலம் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன மழை காரணமாக அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி