விருதுநகர்: பயிர் காவல் கமிட்டி இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், கம்பு, சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மானாவாரியாக பயிர் செய்யப்படுகின்றன. 

இப்பகுதியில் காட்டு பன்றிகள் மற்றும் மான்கள் அதிக அளவு பெருகி விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் காட்டு பன்றிகள் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பந்தல்குடியில் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மற்றும் உயிர் சேதம் செய்யும் காட்டு பன்றிகளையும் மான்களையும் விரட்ட கோரியும், பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் விவசாய டிராக்டர் உரிமையாளர் சங்கம் மற்றும் பயிர் காவல் கமிட்டி இணைந்து மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்று காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் காட்டு பன்றிகள் மற்றும் மான்களை விரட்ட கோரியும் பயிர் சேதத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி