தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

488பார்த்தது
தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
அருப்புக்கோட்டை சிவானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

அருப்புக்கோட்டை ராமசாமி நகர் சிவானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இன்று(9. 10. 23) கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராம்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது குறித்தும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் ஒத்திகை செய்து காண்பித்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் ஒத்திகையை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 பற்றிய கட்டுரை போட்டி ‌நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி