முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

51பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி(66). டிரைவர் வேலை செய்து வந்த குருசாமி தற்போது வயது முதிர்வின் காரணமாக
ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ‌ இந்நிலையில் முன் விரோதம் காரணமாக குருசாமியை, ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குருசாமி அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் நேற்று ஜுன் 6 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி