முன்விரோதம் காரணமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு

62பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ‌ இந்நிலையில் இந்த பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக செல்வத்தை, அழகர் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் அழகர் மீது நேற்று ஜூன் 5 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ‌

தொடர்புடைய செய்தி