வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்கு பதிவு

59பார்த்தது
திருச்சுழி அருகே கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளி குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் நேற்று முன்தினம் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் கொலை செய்யப்பட்ட காலி குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதனை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டி. எஸ். பியை தாக்கிய பாலமுருகன், முருகேசன், பொன்முருகன், ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டி. எஸ். பி-யிடம் முதலில் வம்பிலுத்து பிரச்சனைக்கு காரணமாக இருந்த முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட 16 அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத 100 நபர்கள் என 116 பேர் மீது இரு சார்பு ஆய்வாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தடையை மீறி மறியலில் ஈடுப்பட்டது உள்ளிட்ட இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி