இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு கொடுமைக்காரர் என ஆஸ்திரேலிய பெண் பத்திரிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார். மெல்போர்ன் விமான நிலையத்தில் தன்னுடைய அனுமதியின்றி குழந்தையை புகைப்படம் எடுத்ததை நீக்க சொல்லி கோலி பெண் பத்திரிகையாளரான நாட் யோனிடிஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் கோலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.