இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறுகையில், “இந்த தொடரில் 5-0 என கணக்கில் இந்தியா ஒருவேளை இழந்தால், விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என இந்திய ரசிகர்கள் விருப்பப்படுவார்கள். விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பவர்” என்றார்.