மணிப்பூரில் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மெய்தி அமைப்பின் தலைவர் அரம்பாய் தெங்கோல் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வாகனங்கள், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தனர். இதன் விளைவாக, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பலத்த போலீஸ், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.