இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (சிஏஎஸ்) ஆகஸ்ட் 11-ம் தேதி ஒத்திவைத்தது. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் மனுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில், இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.