விழுப்புரம் - Viluppuram

விழுப்புரம்: ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் புகார்

விழுப்புரம்: ஆலை நிர்வாகம் மிரட்டல் குறைகேட்பு கூட்டத்தில் புகார்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது. டி. ஆர். ஓ. , அரிதாஸ், வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர், துணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அன்பழகன், விற்பனைக்குழு செயலாளர் சந்துரு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரேமலதா, ஆர். டி. ஓ. , முருகேசன் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது: சாத்தனுார் அணையிலிருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பெஞ்சல்' புயலால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். படாளத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், தங்களுக்குத்தான் கரும்பு வழங்க வேண்டுமென, விவசாயிகளை மிரட்டுகின்றனர். இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

வீடியோஸ்


விழுப்புரம்